1. Home
  2. தமிழ்நாடு

தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!

Q

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக்க கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ம் தேதியோடு முடிகிறது. அதற்குள் நாட்டில் பொதுத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரமாக செயலாற்றி வருகிறது.
3வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் பாஜகவும் தீவிரமாகப் பிரசாரத்தில் இறங்கியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியும் பாஜகவை ஆட்சியில் அமரவிடக்கூடாது என்பதற்காக தீவிரமாக திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.
இதனால் 2024ம் ஆண்டு பொதுத்தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்திய தேர்தல் வரலாற்றில் எந்தக் கட்சியும் தொடர்ந்து 3வது முறையாக ஆண்டதில்லை. அதை பாஜக மாற்றுமா அல்லது வரலாறு தொடருமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அனுப் பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். புதிய தேர்தல் ஆணையர் நியமிக்க இருந்தநிலையில் மற்றொரு தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டும் இருந்தார்.
இதனால் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் தேர்தல் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்வதில் சிக்கல் இருந்தது.
இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர் அமித் ஷா மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர அடங்கிய குழு புதிய 2 தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுத்தது.
இதன்படி புதிய தேர்தல் ஆணையர்களாக முன்னாள ஐஏஎஸ் அதிகாரிகள் சுக்பிர் சிங் சாந்து, ஞானேஸ்வர் இருவரையும் தேர்ந்தெடுத்தது. இந்த இரு தேர்தல் ஆணையர்களும் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நடத்துவது எப்போது, எத்தனைக் கட்டங்களாக நடத்துவது, வாக்கு எண்ணிக்கை எப்போது என்பது குறித்தவிவரங்களை நாளை (16ம்தேதி) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும்.
அப்போது பத்திரிகையாளர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இரு தேர்தல் ஆணையர்களும் சந்திப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

Trending News

Latest News

You May Like