1. Home
  2. தமிழ்நாடு

பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

Q

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அங்கீகரிக்கப்படாத கட்சிகள், வரும் நவம்பர் 11-ம் தேதி முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், கேரளா உள்பட 5 மாநில தேர்தலுக்கு பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிவதற்கு 6 மாதம் முன்பாக பொதுச்சின்னம் கோரலாம் என்ற விதியின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபையின் ஆயுட்காலம் 2026 மே 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும் இவ்வாண்டு இறுதியில் நடைபெறும் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கும் பொதுச்சின்னம் கோரி வருகிற 23-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Q

Trending News

Latest News

You May Like