1. Home
  2. தமிழ்நாடு

#ELECTION BREAKING: கல்காஜி தொகுதியில் முதலமைச்சர் அதிஷி 989 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

Q

டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரிவிந்த கெஜ்ரிவால், தற்போதைய முதலமைச்சர் அதிஷி உள்பட 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஆம்ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்த தேர்தலில் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

புது டெல்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால், பாஜக வேட்பாளர் பர்வேஷ் வெர்மாவைக் காட்டிலும் சுமார் 1,000 வாக்குகள் பின்னடைவில் இருந்த நிலையில் இத்தொகுதியில் அவர் பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவியுள்ளார். இத்தொகுதியில் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீக்‌ஷித்தின் மகன் சந்தீப் சுமார் 3,000 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

கெஜ்ரிவாலை வீழ்த்திய பாஜக வேட்பாளர் பர்வேஷ் வெர்மா, முன்னாள் டெல்லி முதல்வரும் பாஜகவின் சீனியர் தலைவருமான சாஹிப் சிங் வெர்மாவின் மகன் ஆவார்.

ஜங்கபுரா தொகுதியில், போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளரான முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தோல்வி அடைந்துள்ளார்.. பாஜகவின் தர்விந்தர் சிங் அங்கு வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் கல்காஜி தொகுதியில் முதலமைச்சர் அதிஷி 989 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! அரவிந்த் கெஜ்ரிவால் தோல் வியடைந்த நிலையில் முதல்வர் அதிஷி வெற்றி பெற்றுள்ளார்.

9 சுற்றுகள் வரை தொடர்ந்து பின்தங்கியிருந்த அதிஷி,இறுதிச் சுற்றில் 989 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்

Trending News

Latest News

You May Like