1. Home
  2. தமிழ்நாடு

சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதியிடம் உதவி கேட்ட மூதாட்டி..!

1

சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் இன்று சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சேப்பாக்கம் திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தின்போது 200 பேருக்கு வேட்டி- சேலையும் வழங்கப்பட்டது. பொதுமக்களோடு அமர்ந்து சமபந்தி விருந்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு ஆகியோர் உணவருந்தினர். 

பின்னர் வேட்டி-சேலையை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். வடை-பாயாசம், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றுடன் சுவையான அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதனை பொதுமக்கள் ருசித்து சாப்பிட்டனர். தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பொதுமக்களோடு அமர்ந்து உணவருந்தினார். அடையாறில் உள்ள ஆனந்த பத்மநாபசுவாமி கோவிலில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார்.

பின்னர், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் மூதாட்டி ஒருவருடன் அமைச்சர் உதயநிதி அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

உணவு சாப்பிட்டுவிட்டு வெளியில் கிளம்பும் நேரத்தில் அங்கிருந்த மூதாட்டி ஒருவர் உதயநிதியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மூதாட்டி, “என்னோட பையனுக்கு ரெண்டு காதுமே கேட்காது. ஆப்ரேசன் பன்ணுனாலும் காது கேட்காது. ஒரு மெஷின் ஒன்னு கொடுத்தாங்க அது வொர்க் ஆகல. கொற கொறனு தான் கேட்குது. சும்மா டெம்ரவரியா தான் என் பையன் போட்டுட்டு வந்துருக்கான்.நாங்க ரொம்ப கஷ்ட படுறோம். கணவரும் கெடையாது. ஒரு பையனுக்கு மனநலம் பாதிப்பு இருந்துச்சு அவன் சமீபத்துல தான் இறந்து போனான்.

அமைச்சர் உதயநிதியிடம் வைத்த கோரிக்கையை பகிர்ந்து கொண்டார்” நா  உதயநிதி சார் கிட்ட லெட்டர் கொடுத்துருக்கேன். திருப்பதி கோவில்ல என் வீட்டுகாரரு லட்டு புடிச்சாரு. 35 வருஷம் சர்வீஸ் அவருக்கு. பத்து பைசா கூட கொடுக்கல.

8 ல்ல இருந்து 10 பேருக்கு மூன்றரை லட்ச ரூபா கொடுத்து இருக்காங்க. எனக்காக நீங்க பேசி  எதாவது உதவி பண்ணி கொடுங்க சார்னு கேட்டன். அதுக்கு அவரு,”கண்டிப்பா என்னால முடிஞ்ச உதவிய நா கண்டிப்பா பன்றேன்” னு சொன்னாரு  என்றார்.

Trending News

Latest News

You May Like