1. Home
  2. தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் கான்வாயில் வாகனம் மோதியதில் முதியவர் மருத்துவமனையில் அனுமதி..!

1

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்துவிட்டு மதுரை விமான நிலையம் சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பிரிவு பகுதியில் சென்ற போது கான்வாயில் வந்த வாகனம் மோதி வாடிப்பட்டி அருகே சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன்,வலது காலில் முறிவு ஏற்பட்டது. அவர் உடனடியாக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Trending News

Latest News

You May Like