ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு..!
எழும்பூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரெயிலில் அடிப்பட்டு முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
கால் துண்டான நிலையில் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், முதியவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்றதே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.