1. Home
  2. தமிழ்நாடு

நடிகைக்காக ‘கர்வா செளத்’ கொண்டாடிய முதியவர்..! எந்த நடிகைன்னு பாருங்க..!

1

வடமாநிலங்களில் கர்வா சௌத் எனப்படும் விரதத்தை மேற்கொள்வார்கள். இது இரண்டு நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது. முதல் நோக்கம், கணவர்களின் உடல்நலன். போருக்கு அல்லது வெளி ஊர்களில் வேலை செய்யும் கணவர், ஆண்டுக்கு குறிப்பிட்ட நாட்களில்தான் வீட்டில் இருப்பார். வீட்டில் இல்லாத நேரங்களில் அவருக்காக பிரார்த்தனை செய்யவே, இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

ஐப்பசி மாதத்தின் 4வது நாளில் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பெண்கள், காலை முதல் மாலை வரை உண்ணா நோன்பிருப்பார்கள். இரவு சந்திரனை சல்லடை வழியாக பார்த்து விரதத்தை முடிப்பார்கள். இதன் மூலம் வெளி ஊர்களில் உள்ள தங்கள் கணவர்கள் நல்ல நலத்துடன் இருப்பார்கள் என்பது இந்து மதத்தின் நம்பிக்கை. சீக்கியர்களும் இந்த நோன்பை பின்பற்றுகிறார்கள்.

இரண்டாவது நோக்கம், சிறப்பான கோதுமை விளைச்சலுக்காகவும் இந்த விரதம் பின்பற்றப்படுகிறது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் , ஹிமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இப்படி இருக்கையில், ஆபாச நடிகை மியா கலிஃபா நலமுடன் இருக்க வேண்டும் என்று முதியவர் ஒருவர் நோன்பு இருந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நோன்பின் இறுதியில் சல்லடை வழியாக அவர் மியா கலிஃபாவை பார்த்து, நோன்பை முடித்திருக்கிறார். இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

 


 

Trending News

Latest News

You May Like