ஜூன் 7ல் பக்ரீத் பண்டிகை..!

இறைத்தூதர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் இப்ராஹிம் இறைவனின் கட்டளையை ஏற்றுக் கொண்டு தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக இந்தப் புனித பக்ரீத் திருநாள் கொண்டாப்பட்டு வருகிறது.
இந்த நாளில் இஸ்லாமியப் பெருமக்கள் புத்தாடை அணிந்து, சிறப்புத் தொழுகை நடத்தி குர்பானி கொடுப்பது வழக்கம். ஏழை, எளிய மக்கள், நண்பர்களுக்கு அசைவ உணவு சமைத்து முஸ்லிம் மக்கள் வழங்குவார்கள்.
பிறை தெரிவதன் அடிப்படையிலேயே பக்ரீத் பண்டிகையும் நிச்சயிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சவுதி அரேபியாவில் பிறை தெரிந்ததாக அறிவிக்கப்பட்டது. மே 26 ஆம் தேதி பிறை நிலவு காணப்பட்டதால், துல் ஹிஜ்ஜா மாதம் தொடங்கியது.
இந்நிலையில், வானில் இன்று துல்ஹச் பிறை தென்பட்டுள்ளது. இதனால், 2025 ஆம் ஆண்டில் பக்ரீத் பண்டிகை ஜூன் 7 ஆம் தேதி கொண்டாடப்படும் ென்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.