தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்பதை ஏற்பதில் ஈகோ...கமல்ஹாசனின் கருத்தில் தவறு ஏதும் இல்லை - சீமான்..!
தமிழில் இருந்து தான் கன்னட மொழி வந்தது என்று கமல் கூறிய கருத்திற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும், பெங்களூரில் கமல்ஹாசனின் பேனரை கிழித்து, அவரது படத்தை தீயிட்டு கொளுத்தினர். மேலும், தக்லைஃப் படம் திரையிடப்பட்டால் தியேட்டர் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று கன்னட அமைப்புகள் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், திராவிட மொழிகளின் தாய் மொழி தமிழ் என்பது அனைவருக்கும் தெரியும், கன்னட மொழி குறித்து கமல் தவறாக கூறவில்லை. தமிழில் இருந்து கன்னடம் வரவில்லை என்றால் அதை ஏன் பெரிது படுத்த வேண்டும்.
தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்பதை ஏற்பதில் ஈகோ. தமிழோடு சமஸ்கிருதம் கலந்து பேசிதான் உருவானது. வரலாற்றை படித்தவர் கமல்: சித்தராமையா தான் வரலாற்றை படிக்க வேண்டும். கன்னட படங்கள் தமிழகத்தில் எந்த இடையூறிமின்றி ஓடின. 63 நாயன்மார்கள், ஆழ்வார்களில் கன்னடர்கள் உள்ளனரா. பணமா, இனமா என்றால் இனமே முக்கியம்.
இரு மாநில மொழி அறிஞர்கள் சான்றுகளை எடுத்து வைக்க வேண்டும். கன்னட மொழி குறித்த கமலின் கருத்தில் தவறு ஏதும் இல்லை. கமல் மன்னிப்பு கேட்க தேவையில்லை. தமிழர்கள் மீதான வெறுப்பின் வெளிப்பாடு. கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் இங்கு வந்து தக் லைப் படத்தை பார்த்து விட்டு செல்ல வேண்டும். தமிழகத்தில் உள்ள பட தயாரிப்பாளர்கள் சங்கம் கமலின் பின்னால் நிற்க வேண்டும். கமலை அச்சுறுத்துவது ஒட்டுமொத்த தமிழனத்தை அச்சுறுத்துவதாகும். தக்லைப் படம் ஓடிடியில் வெளியானால் எப்படி தடுக்க முடியும். திமுகவுக்கும், தமிழுக்கும் என்ன தொடர்பு உள்ளது. இந்த விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.