1. Home
  2. தமிழ்நாடு

முட்டை விலை கிடுகிடுவென உயர்வு..!

Q

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 7 கோடிக்கும் மேற்பட்ட முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 525 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 530 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, பண்ணையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:
சென்னை, 580, ஐதராபாத், 500, விஜயவாடா, 500, பர்வாலா, 460, மும்பை, 560, மைசூரு, 565, பெங்களூரு, 550, கோல்கட்டா, 565, டில்லி, 510 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டைக்கோழி கிலோ, 97 ரூபாய், கறிக்கோழி கிலோ, 3 ரூபாய் உயர்த்தி, 105 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

Trending News

Latest News

You May Like