1. Home
  2. தமிழ்நாடு

முட்டை விலை திடீர் உயர்வு..! ஒரு முட்டை 7 ரூபாய்க்கு விற்பனை..!

1

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தினந்தோறும் பண்ணைகளின் ரொக்க விற்பனைக்கு முட்டை விலையை அறிவிப்பார்கள், அதன் மூலம் தான் பணியாளர்கள் தங்களது முட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். 22 ஆம் தேதி ஒரு முட்டையின் விலை 04.10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக முட்டையின் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படாமல் இருந்த நிலையில் இ சி சி மண்டல தலைவர் சின்ராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 20 பைசா உயர்த்தப்பட்டு தற்போது ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 4.60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த 4 நாட்களில் முட்டையின் விலையானது ரூ.50 காசுகள் உயர்ந்துள்ளது. முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மொத்த விலை உயர்ந்து 1 முட்டை ரூ.6 முதல் ரூ.7 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like