1. Home
  2. தமிழ்நாடு

முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு!

முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு!


முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து 5 ரூபாய் 25 காசுகளுக்கு விற்பனையாகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஒரு ரூபாய் 50 காசுகளுக்கு முட்டை விற்கப்பட்டதால், நாமக்கலில் கடந்த சில மாதங்களாகவே முட்டையின் உற்பத்தி குறைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தற்போது முட்டையின் தேவை அதிகரித்து வருவதாகவும், ஆனால் உற்பத்தி குறைவால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முட்டையின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு அதிகபட்சமாக 5 ரூபாய் 16 காசுகளுக்கு முட்டை விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதன் பிறகு தற்போது தான் வரலாறு காணாத அளவுக்கு முட்டையின் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like