வரலாறு படைத்த முட்டை விலை: ஒன்றுக்கு ரூ.5.90 ஆக நிர்ணயம்..!
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்த மாதம் துவக்கம் முதல் முட்டை விலை படிப்படியாக உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை என்இசிசி மண்டல தலைவர் சிங்கரஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 5.85 ஆக இருந்த முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.90 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
கோழிப்பண்ணை வரலாற்றில் ஒரு முட்டையின் விலை ரூ. 5.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முட்டை விலை ரூ.5.90 காசுகள் என்பது கடந்த 54 ஆண்டு கால தமிழக கோழிப் பண்ணை வரலாற்றில் இது முறை என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 4 நாட்களில் முட்டை விலை 25 காசுகள் விலை உயர்ந்துள்ளது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : ஹைதராபாத் 615, விஜயவாடா 620, பர்வாலா 624, ஹோஸ்பெட் 580, மைசூர் 632, சென்னை 640, மும்பை 675, பெங்களூரு 630, கொல்கத்தா 685, டில்லி 660 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோழிவிலை: பிராய்லர் கறிக்கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 94 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 104 ஆக சிகா அறிவித்துள்ளது.
.png)