1. Home
  2. தமிழ்நாடு

வரும் அக்டோபர் 1 முதல் அமல்..! அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண்..!

Q

கொரோனா தொற்று காலத்தில், நிதி சுமை காரணமாக அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நடைமுறையை 2026 ஏப்.1 முதல் செயல்படுத்த 2025-26 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
கடந்த ஏப்ரலில் சட்டசபையில் விதி எண் 110ன் கீழ், ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை அக்.1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இந் நிலையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு இருந்த ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை அக்.1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்ஜெட்டில் குறிப்பிட்டிருந்த காலத்திற்கு முன்னதாக தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன் மூலம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தாங்கள் ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை சரண் செய்து, அதற்கான பணப்பலன்களை பெற்றுக் கொள்ளலாம். கிட்டத்தட்ட 8 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறுவர்.
தமிழக அரசின் ஈட்டிய விடுப்பு சரண் அறிவிப்பை செயல்படுத்துவதன் மூலம், கூடுதலாக ரூ.3,561 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது, குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like