1. Home
  2. தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்வு..!

1

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1 முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருடாந்திர கல்வி உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரூ.3000-லிருந்து ரூ.6000 ஆகவும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரூ.4000-லிருந்து 8000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தேபோல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.6000-லிருந்து ரூ.12000 ஆகவும் தொழிற்கல்வி மற்றும் முதுகலை படிப்பு மாணவர்களுக்கு ரூ.7000-லிருந்து ரூ.14,000 ஆகவும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like