1. Home
  2. தமிழ்நாடு

விஜயதசமியில் மாணவர்களை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும்! கல்வித்துறை உத்தரவு!

விஜயதசமியில் மாணவர்களை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும்! கல்வித்துறை உத்தரவு!


தமிழகத்தில் விஜயதசமி அன்று அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

விஜயதசமி அன்று எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அந்த காரியம் வெற்றி பெறும் என்பது தமிழக மக்களின் நம்பிகையாக உள்ளது. இதனால், பெற்றோர்கள் சிலர் தங்களது குழந்தைகளை விஜயதசமி அன்று பள்ளிகளில் சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அன்றைய தினம் பல பள்ளி மற்றும் கலைக் கூடங்கள் மாணவ சேர்க்கைக்கு கடந்த காலத்தில் அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி பல குழந்தைகள் பள்ளிகளிலும், நடனம், பாட்டு, வாத்தியக் கருவிகள் இசைக்கும் பயிற்சியிலும் சேர்க்கப்பட்டனர்.

மேலும், கோயில்களில் அரிசி நெல்லைப் பரப்பி அதில் தங்களது குழந்தைக்கு முதன் முதலாக எழுத கற்றுக் கொடுக்கும் பழக்கமும் உள்ளது. மேலும், சரஸ்வதி பூஜையன்று வீடுகளில் வைத்து வழிபட்ட புத்தகங்களை மாணவ, மாணவியர் மிகுந்த பக்தியோடு விஜயதசமியன்று எடுத்து ஆர்வத்துடன் படிப்பதும் வழக்கம். தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த நடைமுறை குறித்து தயக்கம் இருந்து வந்தது.

இந்த நிலையில், அக்டோபர் 26-ம் தேதி நாடு முழுவதும் விஜயதசமி கொண்டாடப்பட்ட உள்ளது. அன்றைய தினம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், அங்கன்வாடி அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைக் கண்டறிந்து குழந்தைகளை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடக்க கல்வி நிலையங்களில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அன்றைய தினம் சேர்க்க விரும்புவர். அதற்கு ஏற்ப கல்வித்துறை தயாராக இருக்க வேண்டும் என தொடக்க கல்வி இயக்குநர் கருப்புசாமி ஒரு சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை நடைமுறை படுத்த வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like