1. Home
  2. தமிழ்நாடு

நாதக ஆட்சியில் படித்தவன், படிக்காதவன் என அனைவருக்கும் அரசு வேலை தரப்படும் - சீமான்..!

1

2024 மக்களவைத் தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி களமிறங்கியது. அனைத்து தொகுதிகளிலும் நாதக தோல்வியைத் தழுவினாலும் 8.16 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றது.

இதனால் நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்தை வழங்கியது தேர்தல் ஆணையம். மாநில கட்சி அந்தஸ்து பெற்ற கட்சிக்கு நிரந்தர சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். நாம் தமிழர் கேட்ட புலி உள்ளிட்ட சின்னங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் தரவில்லை. இதனால் 3 சின்னங்களை வரைந்து அவற்றை தேர்தல் ஆணையத்திடம் நாதக சமர்பித்தது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சிக்கு ஏர் கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலையில் தூத்துக்குடியில் கள் இறக்கும் போராட்டத்தில் பேசிய சீமான், “2026ஆம் ஆண்டு தேர்தலில் புதிய வரலாற்றை நாம் தமிழர் கட்சி படைக்கும். அதே விவசாயி சின்னத்துடன் மீண்டும் களமிறங்குகிறேன். எனக்கு எண்ணம் மட்டும் விவசாயி அல்ல, சின்னமும் அதுதான். மக்கள் சின்னத்தை தேட வேண்டியது இல்லை. ஏனெனில் விவசாயி சின்னத்தில் இருப்பதே நான் தான். சீமானைத் தான் சின்னத்தில் வரைந்து கொடுத்துள்ளனர் என்று தேர்தல் ஆணையத்திற்கு தெரியவில்லை. அது தெரியாமல் சின்னத்திற்கு ஒப்புதல் தந்துவிட்டனர்.


தேர்தல் ஆணையத்திற்கே இப்போதுதான் சின்னத்தில் இருப்பது சீமான் என்பது தெரிகிறது. மக்களான உங்களுக்காக யாரும் வர மாட்டார்கள். உங்களுக்கு என்னை விட்டால் வேறு நாதி கிடையாது? எனக்கும் உங்களை விட்டால் யாரும் கிடையாது. நாதக ஆட்சியில் படித்தவன், படிக்காதவன் என அனைவருக்கும் அரசு வேலை தரப்படும். பங்கற்கண்டு செய்தல், கூடை பின்னுதல் என அதே இடத்தில் தொழில் வசதி செய்துத் தரப்படும். அதற்கு நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like