1. Home
  2. தமிழ்நாடு

நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழ்நாட்டின் ரேஷன் கடைகளின் பரிதாப நிலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

1

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளும் திமுக அரசை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை வருமாறு, 

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை என்று வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.பொது விநியோகத்தில் வரலாற்றுச் சாதனைகளைப் புரிந்து, நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழ்நாட்டின் ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு அவலநிலைக்கு சீர்கெடச் செய்த இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

ஏழை எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சீராக விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். 


 

Trending News

Latest News

You May Like