1. Home
  2. தமிழ்நாடு

உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு வாழை இலை விருந்து - எடப்பாடி பழனிசாமி ட்ரீட்..!

1

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளப் பதிவில், நானும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களும் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது.

இந்த கூட்டணி கொடுங்கோல் ஆட்சி புரியும் திமுகவை வீழ்த்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பவற்றை சரிசெய்து, புது யுகத்திற்கான ஒருங்கிணைந்த வளர்ச்சி, மேம்பாடு, வாய்ப்புகளுக்கு அடித்தளம் போடப்படும்.

என்னுடைய வீட்டில் இரவு விருந்தில் கலந்து கொண்டதற்காக மதிப்பிற்குரிய அமித் ஷா அவர்களுக்கு மிகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சிறப்பான தொலைநோக்கி திட்டமிடலுடன் கைகோர்த்து முன்னேறுவோம். வலுவான, பிரகாசமான, சக்தி வாய்ந்த தமிழகத்தை உருவாக்குவோம் என்று பதிவிட்டுள்ளார். இந்த கூட்டணி தேர்தல் வரை எத்தகைய வியூகத்தை முன்னெடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like