1. Home
  2. தமிழ்நாடு

வரும் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்..!

1

அதிமுக தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் கட்டமாக வரும் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை பிரசாரம் செய்கிறார். அதன்படி, 19.4.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில், அதிமுக சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 24.3.2024 முதல் 31.3.2024 வரை முதல் கட்டமாக தேர்தல் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 24.3.2024 (ஞாயிறு) மாலை 4 மணி நவலூர் குட்டப்பட்டு, வண்ணாங்கோவில், திருச்சி 26.3.2024 (செவ்வாய்) மாலை 4 மணி தூத்துக்குடி, இரவு 7 மணி வாகையடிமுனை, திருநெல்வேலி 27.3.2024 (புதன்) மாலை 4 மணி நாகராஜா கோயில் திடல், நாகர்கோவில் கன்னியாகுமரி இரவு 7 மணி 18ம் படி கருப்பசாமி கோயில் அருகில், வீரசிகாமணி ரோடு, சங்கரன்கோவில் தென்காசி (தனி) 28.3.2024 (வியாழன்) மாலை 4 மணி பாவடி தோப்பு திடல், சிவகாசி விருதுநகர். இரவு 7 மணி ராமநாதபுரம் 29.3.2024 (வெள்ளி) மாலை 4 மணி ஓட்டல் ஹை வே இன் அருகில், தேசிய நெடுஞ்சாலை, மதுராந்தகம் காஞ்சிபுரம் (தனி). இரவு 7 மணி அன்னை தெரேசா பள்ளி அருகில், ராஜேந்திர பிரசாத் பிரதான சாலை, பல்லாவரம், ஸ்ரீபெரும்புதூர் 30.3.2024 (சனி) மாலை 4 மணி ரோடியர் மைதானம், நீதிமன்றம் எதிரில், கடலூர் சாலை, புதுச்சேரி. மாலை 6 மணி மஞ்சக்குப்பம் மைதானம், கடலூர் 31.3.2024 (ஞாயிறு) மாலை 3.30 மணி சிதம்பரம் பைபாஸ் சிதம்பரம் (தனி). மாலை 5.30 மணி சின்ன கடைத்தெரு, மயிலாடுதுறை. இரவு 7.30 மணி தெற்கு வீதி, திருவாரூர் நாகப்பட்டினம் (தனி) இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like