1. Home
  2. தமிழ்நாடு

பாட புத்தக விலை உயர்வால் மாணவர்களின் பெற்றோர் நிலைகுலைந்து போயுள்ளனர் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

Q

பாட புத்தகங்களின் விலையை அரசு உயர்த்தியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

* பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் பாட புத்தகங்களின் விலையை உயர்த்தியது கண்டனத்திற்குரியது.

* 40 சதவீதம் வரை பாட புத்தகங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

* பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி போட்டி தேர்வுக்குத் தயாராவோரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* விலைவாசி உயர்வால் சிரமப்படும் நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

* அரசு பாடத்திட்டத்தில் பயிலும் தனியார் பள்ளி மாணவரிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

* பாட புத்தக விலை உயர்வால் மாணவர்களின் பெற்றோர் நிலைகுலைந்து போயுள்ளனர்.

* பாட புத்தங்களின் விலை உயர்வைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Trending News

Latest News

You May Like