1. Home
  2. தமிழ்நாடு

அதிமுக ஒன்றிணைவு பற்றி எடப்பாடி பழனிசாமி அதிரடி! ஓநாயும், வெள்ளாடும் ஒன்று சேர முடியுமா?

Q

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் நாளைய தினம் (பிப்ரவரி 24) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கட்சி தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடும் வேளையில் “அம்மா அவர்களின் புகழ் ஓங்குக” என்ற வாழ்த்தொலி நம் உள்ளத்திலும், இல்லத்திலும் எதிரொலிக்கிறது.

எப்போது தேர்தல் வரும். ஜெயலலிதா அவர்களின் அரசை மீண்டும் அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு விடியா தி.மு.க அரசு இருமொழிக் கொள்கையை காப்பாற்ற கூட திறனற்றதாக உள்ளது. பொழுது விடிந்து பொழுது போனால் தமிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகள், தாய்மார்கள், ஏன் காவல் பணியில் ஈடுபட்டு வரும் பெண்களும் கூட பாதுகாப்பாற்ற நிலையில் பாலியல் கொடுமைகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளன.

இந்த அவலங்களை எல்லாம் மாற்ற வேண்டும். அதற்கு மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். இன்றைக்கு நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாக திகழ்கிறது. பதவிக்காக பணம் சேர்ப்பதற்காகவும், கழகத்தை காட்டிக் கொடுக்க தயாராக இருந்த திரை மறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும் கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.

ஓநாயும் வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியின் துரோகம் தோலுடன் நூல் நிற்க முடியாது என்று நீங்கள் முழுவது கேட்கிறது. அதிமுக தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை இந்த இயக்கம் தமிழர்கள் வாழ்வு வளம் பெற செயல்படும்.

எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காக இயங்கும் என்றும் அன்றைய ஜெயலலிதா சூளுரைத்தார். அந்த வெற்றி கழகத்தை அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கை பிரகடனத்தை செயல்படுத்த நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள்.

அதிமுக தலைமையில் சிறப்பு மிக்க கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப் போகிறோம். அதற்காக அயராது உழைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like