1. Home
  2. தமிழ்நாடு

தேமுதிகவுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி..!

1

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

“தமிழ்நாடு மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் நமது எல்லைகளுக்கு உட்பட்டு தான் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். எல்லைப் பகுதி சரியான முறையில் தெரியாது, எல்லைக்கோடும் கிடையாது. மீனவர்கள் ஒரு சிலர் இலங்கை எல்லைக்குள் செல்கிறார்கள் அதை கண்டித்து அனுப்ப வேண்டும்.

மீனவர்களுக்கு எல்லையின் அளவு தெரியாது, இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கமும் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். படகை பறிமுதல் செய்தல், தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட செயல்கள் நடைபெறுகிறது.  மீனவர்கள் தொழில் மீன் பிடிப்பது, அதை நம்பி தான் அவரது குடும்பங்கள் உள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை அரசால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாடாளுமன்றத்தில் அதிமுகவில் ஆட்கள் கிடையாது, இதுகுறித்து திமுகவிடம் தான் கேட்க வேண்டும். அதிமுக ஆட்சியில் மீனவர்கள் தொடர்ந்து காப்பாற்றப்பட்டனர்.

கச்சத்தீவை யார் கொடுத்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி விவாதம் வைத்து மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுத்து கருத்துக்கள் வெளியிட வேண்டும்.  தமிழகத்தில் சென்னை உட்பட 38 மாவட்டங்களில் பணியை மேற்கொள்வதற்கு பேரம் பேசுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. திமுகவின் தாரக மந்திரமே கமிஷன், கலெக்ஷன் தான். எல்லா மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

தர்மபுரியில் திமுக மாவட்ட செயலாளர் பேசிய பேச்சுகள் எல்லாம் வெளியாகி உள்ளது. அதில் மாவட்ட ஆட்சியரை மிரட்டுகிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மிரட்டுகிறார். சாதாரண அலுவலர்கள் எல்லாம் எங்கு போய் நிற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக ஆட்சியில் மோசமான நிலைகள் நிகழ்ந்து வருகிறது. தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கும் படி விவாதம் நிகழ்ச்சியில் நடத்துங்கள் என்று வேண்டுகோள்.   திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக தயாராக இருக்கிறது. திமுக மட்டும் தான் எங்களுக்கு எதிரி. மற்ற கட்சிகள் எதுவும் எதிரி இல்லை.

திமுகவை வீழ்த்த வேண்டும். அதுதான் எங்கள் குறிக்கோள். வாக்குகள் சிதறாமல் வாக்குகளை ஒருங்கிணைத்து திமுகவை வீழ்த்துவதுதான் அதிமுகவின் தலையாய கடமை. அதிமுக கூட்டணி குறித்து தேர்தலுக்கு முன்பாக ஆறு மாதங்கள் இருக்கும்போது சொல்லப்படும். சீமானின் தனிப்பட்ட விஷயம்.  அவரின் தனிப்பட்ட விஷயம் குறித்து பேசி கேவலப்படுத்துகிறார்கள். அதை பற்றி கேள்விகள் வேண்டாம்.

திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்?. செயலில் பூஜ்ஜியம். திமுக வார்த்தை ஜாலங்களில் வல்லவர்கள். அப்பா, அப்பா என்று சொன்னால் குடும்பத்தில் பிரச்னை வந்துவிடும். முதல்வராக அதை அவரே உணர வேண்டும். அப்பா என்று கூறினால் பிரச்சனை வந்துவிடும். தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக நாங்க எதுவும் வெளியிடவில்லை.

அதிமுக நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவிற்கு அழுத்தம் கொடுத்தோம்; திமுகவிற்கு பயம், சோதனை வந்துவிடும் என்ற பயத்தில் இருக்கிறார்கள்.. நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தால் நிதி வந்து விடுமா?நாடாளுமன்றத்தில் பேசினால் தான் தீர்வு கிடைக்கும்”. என தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like