1. Home
  2. தமிழ்நாடு

சேலத்தில் 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி..!

1

முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் 70-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.  இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு செய்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். 

எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் முதலே தொண்டர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் திரண்டு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சால்வை, பூங்கொத்து உள்ளிட்டவற்றை பரிசாக கொடுத்து மகிழ்ந்தனர். அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்களை எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். 

தொடர்ந்து நேற்று காலை முதலே எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள், திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள நெடுஞ்சாலை நகர் பகுதியில் அ.தி.மு.க.தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

அதை தொடர்ந்து அவருக்கு கட்சியினர் ஆளுயர மாலை அணிவித்து மகிழ்ந்து அவருடன் போட்டோ எடுத்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் டாக்டர் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் காமராஜ் எம்.எல்.ஏ., டாக்டர் சி விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மகாபலிபுரம் சேர்மன் ராகவன், மேச்சேரி கிழக்கு பேரவை செயலாளர் ராஜா, மேச்சேரி பேரூர் செயலாளர் சி.ஜெ.குமார் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி 70-வது பிறந்தநாளையொட்டி 70 கிலோ எடையில் பிரம்மாண்ட கேக் கொண்டு சென்றிருந்தனர்.  இந்த கேக்குகளை எடப்பாடி பழனிசாமி வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார்.  

Trending News

Latest News

You May Like