எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல்நலக்குறைவு..! இன்றைய கூட்டங்கள் ரத்து..!
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று அதாவது 7-ம் தேதி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 8-ஆம் தேதி சாத்தூா், அருப்புக்கோட்டை, விருதுநகா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காலநிலை மாற்றத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு உடல் சோர்வு, தொண்டைவலி உள்ளதாக கூறப்படுகிறது. உடல்நலன் கருதி ராஜபாளையத்தில் இன்று காலை பங்கேற்க இருந்த உள்அரங்கு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
.png)