1. Home
  2. தமிழ்நாடு

முதலமைச்சர் பதவிக்கு நான் நிற்பேன் என எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் - டிடிவி தினகரன்..!

Q

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; எதைச் சொன்னாலும் எடப்பாடி பழனிசாமி பொய்தான் சொல்வார். பழனிசாமியின் முகம் வாடியுள்ளது; அவரை அப்படியே விட்டு விடுங்கள். 2011 டிசம்பரில் நான் உள்பட சிலர் கட்யில் இருந்து நீக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. சசிகலா பெங்களூரு சென்ற பிறகே அனைவரும் சேர்ந்து என்னை கட்சிக்குள் கொண்டு வந்தனர். எடப்பாடி உள்ளிட்டோர் சேர்ந்துதான் என்னை துணைப் பொதுச்செயலாளராக நியமிக்க கூறினர். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை, சசிகலா கூறியதால் போட்டியிட்டேன். முதலமைச்சர் பதவிக்கு நான் நிற்பேன் என எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்தது. அதிமுகவுக்கோ, பழனிசாமிக்கோ வாக்கு கேட்பேன் என நான் கூறவில்லை. அமமுகவும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக செல்ல முடியாது. என்.டி.ஏ. கூட்டணி முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அவரை ஏற்க மாட்டோம் என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like