அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி அன்வர் ராஜா நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
திமுகவில் இணைவதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்துள்ளார் அன்வர் ராஜா. இந்த செய்தி ஊடகங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே அன்வர் ராஜாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி இன்று வரை அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் அதிமுகவில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.