எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!

எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஜூன் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் அ.தி.மு.க. மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை தொடங்கியுள்ளது. இந்த 2 நாட்களில் காலை 9.30 மணி மற்றும் பிற்பகல் 3.30 மணி என 2 கட்டங்களாக சந்திப்பு நடைபெறும். இவற்றில், மாவட்ட செயலாளர்களுடன் மாவட்ட பொறுப்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.
2026-ம் ஆண்டு வரவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளை அக்கட்சி தீவிரப்படுத்தி உள்ளது. இதில், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார். ஏற்கனவே பூத் கமிட்டி அமைத்து பட்டியலை சமர்ப்பிக்கும்படியும் அவர் உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வழிகளை பற்றி கட்சியினருடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
இதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு கலந்து கொள்ளும் மாவட்டங்கள்:
1 சிவகங்கை
2 திண்டுக்கல் கிழக்கு
3 திண்டுக்கல் மேற்கு
4 அரியலூர்
5 பெரம்பலூர்
6 கரூர்
7 நாமக்கல்
8 தருமபுரி
9 கிருஷ்ணகிரி கிழக்கு
10 கிருஷ்ணகிரி மேற்கு
11 விழுப்புரம்
12 கடலூர் கிழக்கு
13 கடலூர் வடக்கு
14 கடலூர் தெற்கு
15 கடலூர் மேற்கு
16 திருவண்ணாமலை வடக்கு
17 திருவண்ணாமலை தெற்கு
18 திருவண்ணாமலை கிழக்கு
19 திருவண்ணாமலை மத்தியம்
20 ராணிப்பேட்டை கிழக்கு
21 ராணிப்பேட்டை மேற்கு
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கலந்து கொள்ளும் மாவட்டங்கள்:
1 கன்னியாகுமரி கிழக்கு
2 கன்னியாகுமரி மேற்கு
3 தூத்துக்குடி வடக்கு
4 தூத்துக்குடி தெற்கு
5 தென்காசி வடக்கு
6 தென்காசி தெற்கு
7 திருநெல்வேலி மாநகர்
8 திருநெல்வேலி புறநகர்
9 ராமநாதபுரம்
10 விருதுநகர் கிழக்கு
11 விருதுநகர் மேற்கு
12 தேனி கிழக்கு
13 தேனி மேற்கு
14 மதுரை மாநகர்
15 மதுரை புறநகர் கிழக்கு
16 மதுரை புறநகர் மேற்கு
17 புதுக்கோட்டை வடக்கு
18 புதுக்கோட்டை தெற்கு
19 ஈரோடு மாநகர்
20 ஈரோடு புறநகர் கிழக்கு
21 ஈரோடு புறநகர் மேற்கு