இன்று மதியம் மதுரை வருகிறார் எடப்பாடி பழனிசாமி..!
மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பில் மதுரை அம்மா திடலில் நடைபெறும் மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று மதியம் மதுரை வருகிறார். அவருக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் கோர்ட்யார்ட் ஹோட்டல் அருகே எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
எனவே இந்த நிகழ்ச்சியில் இன்னாள்,முன்னாள் சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிGHர்வாகிகள், இன்னாள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், பகுதி,வட்ட, அனைத்து அணி நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.