பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார்..!
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கழக அமைப்புச் செயலாளரும், மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.தேர்தல் பொறுப்பாளருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க.வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.அதன் அடிப்படையில் இன்று மாலை 6:00 மணிக்கு மதுரை பழங்காநத்தம் ரவுண்டான அருகே மதுரை அ.தி.முக. வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆதரித்து எடப்பாடியார் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க உள்ளார்.
எனவே இந்த நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கூட்டணி கட்சி நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், இன்னாள்,முன்னாள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள்,பகுதி செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள்,.எம்ஜிஆர் மன்றம், ஜெயலலிதா பேரவை, இளைஞர் அணி ,மாணவர் அணி, மகளிர் அணி ,வர்த்தக அணி, இலக்கிய அணி, வழக்கறிஞர் பிரிவு, விவசாய பிரிவு, மீனவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை ,தகவல் தொழில்நுட்ப பிரிவு, மற்றும் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் அலைகடலென வந்து கலந்து கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.