அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் எடப்பாடி தரப்பு : ஓபிஎஸ்!
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க புதுச்சேரி வந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம். நாங்கள் பாஜக கூட்டணியில் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக இருக்கிறோம்.இதுவரை தீர்ப்புகளும் முதலில் இருந்து தற்போது வரை எடப்பாடி பழனிசாமிக்கு வந்தவை தற்காலிக தீர்ப்புகள்தான்.சிவில் சூட்டில் கவனித்து கொள்ள உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், முன்னதாக பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புகள் பொருந்தாது.
தற்போது எந்த நிலையிலும் எடப்பாடி பழனிசாமியை யாரும் நம்பத் தயாராக இல்லாத சூழல் அரசியலில் ஏற்பட்டுள்ளது. நல்லது செய்தவர்களுக்கு நன்றியில்லாமல் நடந்ததால் கட்சிகள் அவரை நாடுவதில்லை. அதனால் அவரை தவிர்க்கிறார்கள்.எத்தனை தொகுதியில் போட்டி என்பதை இறுதி செய்த பிறகு அறிவிப்போம்.நாங்கள் அமமுக பொதுச்செயலர் தினகரனும் இணைந்து பணியாற்றி வருகிறோம். சின்னம்மா சசிகலா விருப்பத்தை கேளுங்கள் சிறந்த மனிதாபிமானமிக்க நடிகர் ரஜினி. அனைவருக்கும் மரியாதை தரக்கூடியவர். சசிகலா அழைத்ததால் சென்று பார்த்துள்ளார்.
மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் உடன் சேரும் வாய்ப்பு இல்லை.முதலில் விமர்சனம் செய்தது எடப்பாடி அணி. அதற்கு பதில்தான் அண்ணாமலை தருகிறார். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்தை பெற தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருக்கிறோம். எடப்பாடி போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழக்கும்” என்று அவர் கூறினார்.