அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எக்மோ சிகிச்சை..??

இன்று காலை சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அதையடுத்து கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்க தருமபுரி காரிமங்கலம் வழியாக காரில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக காரிமங்கலம் பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டார். சுமார் ஒரு மணிநேர ஓய்வுக்கு பின், அவர் பங்கேற்க வேண்டிய கிருஷ்ணகிரி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து பரிசோதனைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டார். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எக்கோ மற்றும் ஆஞ்சியோ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதில் அவருக்கு ரத்தக்குழாய்களில் எந்த அடைப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது. எனினும் இன்று இரவு மருத்துவமனையில் அவரை தங்கி இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.