சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் 6.1 ஆக பதிவு

இந்தோனேசியாவில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 எனப் பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, நிலநடுக்கத்தால் எந்தவொரு சேதம் அல்லது உயிரிழப்புகள் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
உள்ளூர் நேரப்படி காலை 6:55 மணிக்கு (2255 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது வடக்கு சுலவேசி மாகாணத்தின் அருகில் கடலோரத்தில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நிலநடுக்கம் ரிக்டரில் 6.0 எனப் பதிவாகியுள்ளதுடன், சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
முந்தைய ஜனவரி 2021ல் சுலவேசியை தாக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக 100-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டன.