டெல்லியில் ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் அச்சம் !!

இந்தியாவின் வட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரியானாவின் தென்மேற்கே 63 கி.மீ. தொலைவில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டரில் 4.5 ஆக பதிவானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். இதேபோல், மிசோரமின் சம்பால் பகுதியில் இன்று மதியம் 2.45 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது. அரியானா, மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, மேகாலயா, சத்தீஸ்கர் என கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Newstm.in