டெல்லியில் நிலநடுக்கம்..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுங்க; டில்லிவாசிகளுக்கு மோடி அறிவுரை..!

டில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (பிப்.,17) அதிகாலை 5.30 மணியளவில் பூமிக்கு கீழே 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தின் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இது தொடர்பாக, சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
* டில்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
* மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும்.
* பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.
* நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.