1. Home
  2. தமிழ்நாடு

33 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !!

33 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !!


கொரோனா பாதிப்பிலிருந்து கடந்த வாரம் முழுமையாக வெளியேறிவிட்டதாக நியூசிலாந்து அறிவித்தது. எனினும், அந்த நாட்டில் சில தளர்வுகளுடன் கட்டுப்பாடுகள் தற்போதும் தொடர்கிறது.

33 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !!

இந்த நிலையில் , நேற்று நள்ளிரவு அந்த நாட்டின் கெர்மடெக் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 33 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

நியூசிலாந்தின் தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனமும் கரையோரப் பகுதிகளில் வலுவான மற்றும் அசாதாரணமான நீரோட்டம் மற்றும் கணிக்க முடியாத அளவில் அலையின் எழுச்சி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தது.

இருப்பினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இது தொடர்பாக தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், `கெர்மடெக் தீவுகளின் தெற்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நியூசிலாந்திற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை.

தற்போதைய தகவல்களின் அடிப்படையில், இந்த நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை என்பது ஆரம்ப மதிப்பீட்டாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டின் பாதுகாப்பு படை, கடற்கரையில் வசிக்கும் மக்களை உயரமான பகுதிக்கு இடமாற்றம் செய்துள்ளது.

இந்தத் தீவில் பலரும் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். பலர் கடுமையான அளவில் இந்த நிலநடுக்கம் இருந்ததாகவும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் தொடர்பாக கருத்து தெரிவித்த விஞ்ஞானிகள் , நிலநடுக்கம் சக்தி வாய்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை.

இது சுனாமியை தூண்டிவிடாமல் போனது நியூசிலாந்து கிடைத்த அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும் என்றனர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானிலும் 6.8 என்ற ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் செவ்வாய் அன்று உணரப்பட்டது.

Newstm.in

Trending News

Latest News

You May Like