ஒரு போன் வச்சிக்கிட்டு சிறையிலிருந்தே சம்பாத்தியம் – கலக்கும் கைதி ..!

ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்று சொல்வார்கள். அதுபோல அடுத்தவரை மிரட்டி பணம் சம்பாதித்த ஒருவரால், எங்கிருந்தாலும், குறிப்பாக சிறையில் இருந்தாலும் சும்மா இருக்க முடியாது என்பதை உணர்த்தி இருக்கிறார் புதுச்சேரி ஜெகன்.
இவர் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காலாப்பட்டு சிறையில் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் சிறையிலிருந்து படியே பலரை போனில் மிரட்டி பணம் சம்பாதிக்கும் விஷயம் இப்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் கடலூரில் உள்ள ஒரு இரும்புக்கடை அதிபர் தன்சேகர் என்பவருக்கு ஜெகன் போன் செய்து, தன்னுடைய கூட்டாளி மதனிடம் 50000 ரூபாய் பணத்தை உடனே கொடுக்கவில்லை என்றால் தன்னுடைய ஆட்கள் தனசேகரை கொன்று விடுவார்கள் என்று கூறி தனசேகரை மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்து போன தனசேகர் அவரை தேடி வந்த ஜெகனின் அடியாட்களிடம் ஜெகன் கேட்ட 50000 ரூபாயை கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை வாங்கிய ஜெகனின் கூட்டாளி, அந்தப் பணத்தை ஜெகனின் மனைவிடம் கொடுக்காமல் தானே வைத்துக் கொண்டுள்ளான். இதனை அறிந்த ஜெகன், மீண்டும் தனசேகருக்கு போன் செய்து இன்னும் பணம் வரவில்லை உடனே கொடுக்குமாறு கூறியுள்ளார்.
தன்னுடைய அடியாட்களை மீண்டும் அவரின் கடைக்கு அனுப்பி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன தனசேகர் அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகனின் கூட்டாளிகளை சிலரை கைது செய்து சிறையிலடைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
newstm.in