1. Home
  2. தமிழ்நாடு

கிருஷ்ணன் கோவிலுக்கு தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கிய துர்கா ஸ்டாலின்!

1

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று குருவாயூர் கோவில். கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவில், தென்னாட்டின் துவாரகா என்றும், கிருஷ்ணர் பிறந்த இடம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின்  32 சவரன் தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கவுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது. 

தங்க கிரீடம்

இந்நிலையில், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் 32 சவரன் தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கினார். 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 32 சவரன் தங்க கிரீடத்தை அவர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். தனது சகோதரி ஜெயந்தி மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் கோவிலுக்கு சென்ற துர்கா ஸ்டாலின் தங்க கிரீடத்தை கிருஷ்ணன் கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். இதேபோல்  2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சந்தனம் அரைப்பதற்கான பிரத்யேக எந்திரத்தையும் காணிக்கையாக வழங்கினார். இதனை தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலினுக்கு, கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

Trending News

Latest News

You May Like