துர்கா பூஜை! நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

துர்கா பூஜையையொட்டி, பொது மக்களுக்கு குடியரசு தலைவர் , துணை குடியரசு தலைவர் , பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
நாடு முழுவதும் துர்கா பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொது மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுபிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில். எனது அன்பான குடிமக்களுக்கு துர்கா பூஜை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், இந்த தருணத்தில் பெண்ணினத்தை மதிக்க உறுதியேற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல, பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில், அனைத்து மக்களுக்கும் அஷ்டமி சிறப்பு தின வாழ்த்துகள் என்றும், அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் வளம் தொடர துர்கை அம்மனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.