துர்கா காளிகாம்பா கோவில் அர்ச்சகர் துாக்கிட்டு தற்கொலை..!
உத்தர கன்னடாவின் சிர்சியை சேர்ந்தவர் விஜய் ஹெக்டே, 33. தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி சவனாலு கிராமத்தில் உள்ள, துர்கா காளிகாம்பா கோவில் அர்ச்சகராக இருந்தார். கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஆண் குழந்தை பிறந்தது. மனைவியும், குழந்தையும் மாமியார் வீட்டில் இருந்ததால், விஜய் ஹெக்டே தனியாக வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலையில் இருந்து, விஜய் கோவிலுக்கு வரவில்லை. இதனால் அவரது மொபைல் போனுக்கு, பக்தர்கள் அழைத்தனர். போனை எடுத்து பேசவில்லை. சந்தேகம் அடைந்த பக்தர்கள், விஜய் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது, துாக்கில் தொங்கியது தெரியவந்தது. பெல்தங்கடி போலீசாரின், முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்தது தெரிந்தது. விசாரணை நடக்கிறது.