நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை - துரை வைகோ..!
அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா மாநாடு மதுரை வளையங்குலம் பகுதியில் நடைபெற்றது.
மதுரை மதிமுக மாநாட்டில் துரை வைகோ பேசியதாவது, 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற விவாதம் தொண்டர்கள் இடையே நடக்கிறது, ஆனால் எனக்கு தேர்தலில் போட்டியிட் விருப்பமில்லை; இந்த இயக்கம் கொடுத்த முதன்மை செயலாளர் பதவி கூட எனக்கு தேவையில்லை,மதிமுக தொண்டன் என்ற ஒரு அடையாளம் போதும் என்றார்.
மேலும், சனாதன தர்மம் பெண் விடுதலைக்கு எதிரானது. குழந்தை திருமணத்தை வற்புறுத்தியது. பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்றது. மானத்தை காக்க மேலாடை அணிய கூடாது. இதைத்தான் பெரியார், அண்ணா மற்றும் 100 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் எதிர்க்கிறது.
50 ஆண்டுகளுக்கு முன்பாக சனாதனத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது. அதற்கு காரணம் அம்பேத்கரும், அண்ணாவும், பெரியாரும் தான். சனாதனத்தை வேறோடு அறுப்பது அனைவரின் கடமை. இரண்டு பிறவியில் கொடுக்க வேண்டிய உழைப்பை தலைவர் வைகோ ஒரு பிறவியில் கொடுத்துள்ளார். இந்த மாநாடு வெற்றி அடைந்துள்ளது. இன்று இரவு தலைவர் நிம்மதியாக உறங்குவார்.
தலைவரின் சுமையை குறைக்க அரசியலுக்கு வந்தவன் நான் இல்லை. உங்களால் இழுத்து வரப்பட்டவன் நான். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு அப்போது இயக்கத்தை கலைக்க முற்பட்டவர்களை களையெடுத்தவன் நான். அரசியல் ஆசை எனக்கில்லை. அதனால் தான் சட்டமன்றத்தில் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. யூதாஸை மன்னித்த இயேசு நாதரின் உள்ளத்தை பெற்றவர். மத்திய மந்திரி பதவிக்காக இரண்டு மணி நேரம் அத்வானி பேசினார். அதை மறுத்தவர். இந்த இயக்கத்தின் முதன்மை நிலைய செயலாளர் பதவி தேவையில்லை அடிபடைத் தொண்டானாக இருக்கிறேன். அது போதும்"
இவ்வாறு பேசும்போது துரை வைகோ கண் கலங்கினார்.