1. Home
  2. தமிழ்நாடு

செப்.5-ல் துலீப் டிராபி தொடக்கம்..!

1

துலீப் டிராபி தொடர் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்க இருக்கிறது.  இந்த தொடரின் முதல் போட்டியில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் நடத்துகிறது. இந்த போட்டியை சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடத்த பிசிசிஐ கேட்டுக்கொண்டது. அதன்படி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சின்னசாமி மைதானத்தில் நடத்துகிறது. வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் செப்டம்பர் 18-ந்தேதி நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கு சிறந்த பயிற்சி ஆட்டமாக துலீப் டிராபி இருக்கும் என பிசிசிஐ நினைக்கிறது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடிக்கும் சர்வதேச வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு உள்நாட்டு போட்டியில் விளையாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேஎல் ராகுல், சுப்மன் கில், ஆர் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷ்ரேயாஸ் அய்யர், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இந்த போட்டியில் விளையாடுவாரக்ள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like