தொடர் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் சாலைகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 153 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மழை, வெள்ளம் தொடர்பான விபத்துகளில் பலர் பலியாகி உள்ளனர். டெல்லியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து 58 வயது நபர் உயிரிழந்தார்.
மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மந்திரி அதிதி பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், தொடர் மழை காரணமாக டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.