1. Home
  2. தமிழ்நாடு

டைவர்ஸ் செய்வதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்த துபாய் இளவரசி..!

A

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்துாமின் மகள் இளவரசி ஷைக்கா மஹ்ரா, 30. பிரிட்டனில் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கும் துபாயை சேர்ந்த தொழிலதிபரான ஷேக் மனா பின் முகமது என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கைக்குழந்தையும் உள்ளது.
சமீபத்தில், துபாய் இளவரசி மஹ்ரா, தன் கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் அதிரடியாக அறிவித்தார். அந்த பதிவில், ‘அன்பிற்குரிய கணவரே, நீங்கள் பிறருடன் நேரம் செலவிட்டு வருவதால், நான் விவாகரத்தை அறிவிக்கிறேன். இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி’ என குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார்.
அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் இருவரும் சேர்ந்தாற்போல் பதிவிட்டிருந்த புகைப்படங்களையும் நீக்கினார். இளவரசி மஹ்ரா பொதுவெளியில் விவாகரத்தை அறிவித்தது துபாயில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், தற்போது வாசனை திரவியம் ஒன்றை இளவரசி மஹ்ரா இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதற்கு ‘DIVORCE’ (விவாகரத்து) என பெயரிட்டுள்ளார். இந்த பெயர் தான் சமூகவலைதளத்தில் சுவாரஸ்யமான விவாதத்தை கிளப்பி உள்ளது. ‘கணவருக்கு விவாகரத்து முதல் எல்லாமே இன்ஸ்டாகிராம் வாயிலாகத்தான் இளவரசி கொடுக்கிறார்’ என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like