ரூ.11 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்.. பியூட்டி பார்லர் பணிப்பெண் கைது !
ரூ.11 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்.. பியூட்டி பார்லர் பணிப்பெண் கைது !

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை விசாரித்த அதிகாரிகள் போதைப்பொருள் விவகாரத்தை தோண்டியுள்ளனர். அதாவது நடிகரின் காதலி ரியாவிடம் விசாரித்தப்போது போதைப்பொருள் பயன்பாடு குறித்த தகவல் வெளியானது.
இதனையடுத்து பாலிவுட் நடிகர்கள் தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத்தி சிங் உள்ளிட்ட பிரபலங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது அதிர்ச்சி அடையச்செய்தது. மேலும் மும்பை முழுவதும் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதனை ஒடுக்கும் பணியை அவர்கள் தொடங்கினர்.
அந்த வகையில், மும்பையில் போதைப் பொருட்கள் கடத்தும் கும்பலை பிடிக்கும் வேட்டையில் ஈடுப்பட்டிருக்கின்றனர். தீவிர தேடுதலுக்கு பின் தற்போது 10க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் பிடிப்பட்டுள்ளனர்.
அந்த வரிசையில், ரூ.11 லட்சம் மதிப்பிலான 109 கிராம் கொக்கேன் என்ற போதைப்பொருளை வைத்திருந்த 24 வயது பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். மஞ்சுஷா சிங் என்ற இளம்பெண் சிவாஜி நகரில் கோவந்தி என்ற பகுதியில் தங்கு அங்குள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலைசெய்து வந்துள்ளார்.
அவருக்கு பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் போதைப்பொருள் கடத்தும் நபர் ஒருவரின் தொடர்பு கிடைத்திருக்கிறது. அந்த நபரின் வழிகாட்டுதலின் படி இந்த தொழிலில் அவர் இறங்கியிருக்கிறார் என போலீசார் கூறுகின்றனர்.
இந்தத் தொழில் இளம்பெண் கடந்த 4 மாதங்களாக ஈடுட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை போதைக்கும்பலுடன் சேர்த்துவிட்டது யார், அவர்களின் போதைப்பொருள் கடத்தல் தலைவன் யார் என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
newstm.in