'Drug mafia kazhagam' என்கிற பெயரே உங்களுக்கு பொருத்தமா இருக்கும்: திமுகவை சாடிய பாஜக..!
தமிழகத்தில் நடந்த போதைப்பொருள் வழக்கில் சிக்கிய திமுகவினர் குறித்த தகவலை ஒரு வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது தமிழக பாஜக.
தமிழக பாஜக கட்சியின் எக்ஸ் பக்கத்தில் தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க வேண்டுமென்றால் திமுகவை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த பதிவில்,ரூ.2,000 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: திமுக முன்னாள் நிர்வாகிக்கு அழைப்பாணை. நாகையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்: திமுக பிரமுகர் உட்பட 6 பேர் கைது
புதுக்கோட்டையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக சொல்லப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில்புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தென்காசியில் போதைப்பொருள் கடத்தல்..! திமுக நிர்வாகி கைது..! தலைமைக்கழக அறிவிப்பும் நடந்தது என்ன?ரூ.70 கோடி மெத்தம்பெட்டமைன் வழக்கு; சர்வதேச அளவில் தொடர்பு? திமுகவில் இருந்து நிரந்தர நீக்கம்!
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தலில் கைதான இப்ராஹில் திமுக மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைத் தலைவராக இருந்தவர் என்பது தெரிய வந்துள்ளது என பேப்பர் செய்திகளை கோடிட்டு அந்த பதிவில் காட்டியுள்ளது.
மேலும் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே உங்கள் கட்சிக்கு சாலப் பொருத்தமாக இருக்கும் என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே உங்கள் கட்சிக்கு சாலப் பொருத்தமாக இருக்கும் @mkstalin.! #DrugsMafiaKazhagam pic.twitter.com/skmckKt0GI
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) June 26, 2025
திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே உங்கள் கட்சிக்கு சாலப் பொருத்தமாக இருக்கும் @mkstalin.! #DrugsMafiaKazhagam pic.twitter.com/skmckKt0GI
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) June 26, 2025