ஓடும் பேருந்தில் ஓட்டுநர், நடத்துனரால் மாறி மாறி இளம்பெண் பலாத்காரம்.. அதிர்ச்சி சம்பவம் !

உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த காலமாக பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதற்கு ஏற்றார்போல் மாநிலத்தில் பெண்கள் எதிரான குற்றங்கள் தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.
தற்போது அங்கு ஒருபேருந்தில் வைத்து இளம்பெண் ஒருவரை நடத்துனர் மற்றும் ஓட்டுநர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பைசாலி பேருந்து நிலையத்தில் நின்ற பேருந்தில் இரவில் ஒரு இளம் பெண் ஏறி பயணம் செய்தார். அந்த பேருந்தில் அப்போது அப்பெண்ணை தவிர வேற பயணிகள் யாரும் இல்லை. பேருந்து மீரட் - டெல்லி சாலையில் சென்றப்போது நடத்துனர் இளம்பெண்ணிற்கு குளிர்பானம் கொடுத்துள்ளார்.
ஆனால் அப்பெண் அதனை வாங்க மறுத்துள்ளார். எனினும் நம்பவைத்து அப்பெண்ணை வலுகட்டாயமாக நடத்துனர் குடிக்க வைத்துள்ளார். குளிர்பானம் குடித்த சில நிமிடங்களில் இளம்பெண் பேருந்திலேயே மயக்கம் அடைந்தார்.
பின்னர் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருட்டில் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தினார். இதனையடுத்து இருவரும் பேருந்தில் வைத்தே அப்பெண்ணை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர். வெறிதீர உறவுக்கொண்ட பின்னர் பேருந்தை எடுத்துச்சென்ற இருவரும் அரை மயக்கத்தில் இருந்த பெண்ணை மீரட் சாலையிலே இறக்கி விட்டு சென்றனர்.
பின்னர் அப்பெண் சாலையில் மயங்கிவிழுந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்த போலீசார் அங்கு விரைந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் அப்பெண் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து விளக்கியுள்ளார்.
இதனைகேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in