1. Home
  2. தமிழ்நாடு

ஆன்லைன் மூலம் டிரைவிங் லைசன்ஸ் !! எங்கு தெரியுமா ?

ஆன்லைன் மூலம் டிரைவிங் லைசன்ஸ் !! எங்கு தெரியுமா ?

நாடு முழுவதும் கார், பைக் விற்பனை அதிகரித்து வருவதால் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படுவதை காணமுடிகிறது. அதேநேரத்தில் ஓட்டுநர் உரிமம் பெறவும் நாள்தோறும் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், ஒருவருடைய ஓட்டுநர் உரிமத்தை மற்றொருவர் தவறாகப் பயன்படுத்துவதாக புகார்கள் குவிந்தன. இதனையடுத்து நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய ஓட்டுநர் உரிமத்தை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிரா போக்குவரத்து துறை துணை கமிஷனர் செய்திக்குறிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதில், இருசக்கர , நான்கு சக்கர வாகன ஓட்ட விரும்புபவர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வருவதற்கு பதில் இப்போது அதை வீட்டில் இருந்தபடியே பெற முடியும். ஆதார் அட்டையை பயன்படுத்தி ஓட்டுனர் பயிற்சி உரிமத்தை ஆன்லைனில் விண்ணப்பித்து தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்றும் இதன் மூலம் சட்டவிரோத முகவர்களை தடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது

இந்த முறைப்படி பொதுமக்களின் பணமும், நேரமும் மிச்சமாகும், அலுவலக ஊழியர்கள் வேலைப்பளுவும் குறைவதாக மகாராஷ்டிரா போக்குவரத்து துறை துணை கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார். ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் ஓட்டுனர் பயிற்சி உரிமங்களை மகாராஷ்டிரா அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like