BS III மற்றும் BS IV ரக வாகனங்களை சாலையில் இயக்கினால் 20,000 ரூபாய் அபராதம்!

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டிய நிலையில், அருகில் இருப்பவர் கூட தெரியாத வகையில் நகரம் காட்சியளிக்கும் ட்ரோன் வீடியோ வெளியாகியுள்ளது. டெல்லியில் காற்றின் தரக்குறியீடு கடந்த சில வாரங்களாக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழல் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகர் முழுவதும் தண்ணீர் பாய்ச்சியும் எரிப்பு பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தியும் அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பி.எஸ் 3 ரக பெட்ரோல் வாகனங்கள் மற்றும் பி.எஸ் 4 ரக டீசல் வாகங்கள் சாலைகளில் இயக்கப்பட்டால் அவற்றிற்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது பி.எஸ் 3 மற்றும் பி.எஸ் 4 ரக வாகனங்கள் மூலம் சுற்றுச்சூழல் அதிகளவு மாசையும் என்பதால் அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.