1. Home
  2. தமிழ்நாடு

ஜிபிஎஸ்-ஐ பார்த்து வண்டியை ஒட்டியதால் நேர்ந்த விபரீதம்..!

1

நம்மில் பலர் கார் அல்லது பைக்கில் பயணம் செய்யும் போது ஜிபிஎஸ்-ஐ ஆன் செய்துவிட்டு பயணிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், சில நேரங்களில் அது தவறான வழிகளை காட்டி, விபத்துகளும் ஏற்படத்தான் செய்கின்றன.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் ஃபருகாபாத்தைச் சேர்ந்த விவேக் குமார், அமீத் ஆகிய சகோதரர்கள், தங்களுடன் இன்னொருவரை அழைத்துக்கொண்டு இன்று காலை பதாவுன் மாவட்டத்தில் உள்ள பரேலியில் இருந்து டதாகஞ்ச் என்னும் இடத்திற்கு காரில் சென்றுள்ளனர்.

ஜிபிஎஸ்-ஐ ஆன் செய்துவைத்து அது காட்டும் வழியில் காரை ஓட்டிச் சென்றுள்ளனர். ஃபரித்பூர் என்னும் இடத்தில் செல்லும்போது ஜிபிஎஸ் தவறான வழியைக் காட்டியுள்ளது. அதுதான் சரியான வழி என நம்பிச் சென்ற மூவரும் பயணித்த நிலையில், அது இன்னும் கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் பாலத்திற்கு கொண்டு சென்றது. பாலத்தின் மீது பயணித்த கார், பாதியோடு பாலம் முடிந்ததால், திடீரென் 50 அடிக்கு கீழே ஓடும் ராமகங்கா ஆற்றில் விழுந்தது.

தகவலறிந்து உடனடியாக அங்கு விரைந்த கிராம பொதுமக்கள், காரை ஆற்றில் இருந்து வெளியே எடுத்து வந்தனர். அதற்குள் காருக்குள் இருந்த மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக ஊர் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மூவரின் உடல்களும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மூவரும் உயிரிழந்த தகவல் அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்து உடல்களை கண்டு கதறி அழுதனர். கூகுள் மேப்பை நம்பிதான் அவர்கள் காரை ஒட்டிச் சென்றதாகக் குறிப்பிட்ட குடும்பத்தினர், அரசு நிர்வாகத்தின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என்று குற்றம்சாட்டினர்.

Trending News

Latest News

You May Like